தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக நடிக்க அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த வலிமை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தொடரந்து அஜித்குமார் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் அஜித் குமார் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்குமார் அடுத்து நடிக்கும் #AK61 திரைப்படத்தையும் H.வினோத் இயக்கி வருகிறார். நேர் கொண்ட பார்வை & வலிமை படங்களைத் தொடர்ந்து #AK61 திரைப்படத்தில் 3வது முறையாக அஜித்குமார்-H.வினோத்-போனி கபூர் மற்றும் நீரவ்ஷா கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் #AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக நமது கலாட்டா குழுமத்திற்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் AK61 படம் குறித்த பல ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார். வைரலாகும் போனி கபூரின் அந்த வீடியோ இதோ…