பிரம்மிக்க வைக்கும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... பரபரக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டின் அதிரடி GLIMPSE இதோ!

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்  ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ,chiyaan vikram pa ranjith in thangalaan final leg shoot making video | Galatta

இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் தயாராகி வரும் தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருந்து அட்டகாசமான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று தற்போது வெளிவந்தது. இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த சீயான் விக்ரம் அடுத்து தங்கலான் படத்தின் மூலம் மீண்டும் இதயங்களை கொள்ளையடிக்க வருகிறார். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் முதல்முறையாக சீயான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் தங்கலான். சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்குகிற தங்கலான் திரைப்படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் தங்கலான் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத முற்றிலும் வேறு விதமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கும் படக்குழுவினர், ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். அந்த வகையில் முன்னதாக சீயான் விக்ரமின் பிறந்த நாள் தினத்தன்று வெளிவந்த தங்கலான் திரைப்படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. 

முன்னதாக தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சீயான் விக்ரமுக்கு விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்டிருந்த காயம் காரணமாக சில நாட்களுக்கு தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்தது. தொடரந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு ஓய்வெடுத்து வந்த நடிகர் சீயான் விக்ரம் தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்திருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் இன்னும் கடைசியாக 20 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த இறுதி கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படப்பிடிப்பில் சியான் விக்ரமும் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டு, இறுதி கட்ட படப்பிடிப்பில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிக்காக சீயான் விக்ரம் பிரத்தியேக மேக்கப் எடுத்துக் கொள்ளும் காட்சிகளோடு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படும் புதிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை தற்போது தங்கலான் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள தங்கலான் படத்தின் மிரள வைக்கும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம். 
 

Something exceptional in the making!
Amidst intense and tireless efforts, #Thangalaan shoot is in full swing 🌀

Brace yourself!⚡@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone @thehari___pic.twitter.com/GG00yYuERB

— Studio Green (@StudioGreen2) June 28, 2023

“இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது!”- ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்… இந்தியன் 2 பட பக்கா மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

“இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது!”- ஷங்கருக்கு வாட்ச் பரிசளித்த கமல்ஹாசன்… இந்தியன் 2 பட பக்கா மாஸ் அப்டேட் இதோ!

சினிமா

"INTERVAL-ல தியேட்டர் எல்லாம் வெடிக்கும்!"- மாரி செல்வராஜின் மாமன்னன் பட முதல் விமர்சனம் கொடுத்த 'கர்ணன்' தனுஷ்! அதிரடி பதிவு இதோ

சினிமா

"விடுமுறையில் 5 நிமிடங்கள் வீண்!"- கணவர் ராகுல் ஷர்மாவுடன் விவாகரத்து என பரவிய வதந்திகளுக்கு மௌனம் கலைத்த அசின்! விவரம் உள்ளே