"தனுஷ் ரசிகர்களே தயாரா?"- அதிரடியான கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு,Dhanush in captain miller movie first look release date announcement | Galatta

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக கோலிவுட் டோலிவுட் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியா இந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த வாத்தி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்ததாக ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க வருகிறார். இந்த படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டப் படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிகிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெகுவிரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தனுஷ் நடிப்பில் அடுத்த அதிரடி திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தென்காசிக்கு அருகே மேற்கு தொடர்ச்சி மலைகளை சுற்றி அடர் வனப் பகுதிகளிலும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் அனுமதி பெறாமல் நடைபெற்றதாக சில சர்ச்சைகள் கிளம்பியது. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வருமஇந்த ஜூன் மாதத்திலும், டீசர் வரும் ஜூலை மாதத்திலும் வெளியாகும் என ஏற்கனவே படக் குழுவினர் அறிவித்துள்ளனர். எனவே அடுத்த மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வரும் ஜூன் 30-ம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். அட்டகாசமான அந்த அறிவிப்பு கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

The most awaited #CaptainMiller First Look on JUNE 30 , 2023 🥁🔥@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @dhilipaction @siddnunidop @SathyaJyothi pic.twitter.com/6KxrE8t34c

— G.V.Prakash Kumar (@gvprakash) June 27, 2023

அந்த மனசு தான்..! பணியிழந்த பெண் ஓட்டுனருக்கு கார் வாங்கி தந்த கமல் ஹாசன்.. - குவியும் பாராட்டுகள்..
சினிமா

அந்த மனசு தான்..! பணியிழந்த பெண் ஓட்டுனருக்கு கார் வாங்கி தந்த கமல் ஹாசன்.. - குவியும் பாராட்டுகள்..

சினிமா

"CLIMAX வேற லெவல்ல இருக்கும்!"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பக்கா ஆக்ஷன் அப்டேட் கொடுத்த ஸ்டண் சிவா! வீடியோ இதோ

'அடர் காட்டு பகுதியில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா?'- ரத்னகுமார் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!
சினிமா

'அடர் காட்டு பகுதியில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா?'- ரத்னகுமார் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!