கொண்டாடி கொளுத்தனும் டி.! இணைய தளங்களை அதிரவிடும் ‘நா ரெடி.’ பாடல்.. - மாஸ் காட்டும் தளபதி விஜய் ரசிகர்கள்..

இணையத்தில் மாஸ் காட்டும் தளபதி விஜயின் நா ரெடி பாடல் - Thalapathi Vijay Leo first singe naa ready massive trending | Galatta

நாளுக்கு நாள் சுவாரஸ்மான அப்டேட்டுகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திரைப்படம் ‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் இப்படத்தின் அறிவிப்பிளிருந்தே தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி தற்போது மிக பிரம்மாண்டமாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தளபதி விஜயுடன் திரிஷா, இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்,  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரித்து உருவாகி வரும் லியோ படத்திற்கு ஒளிப்பதிவாளர்  மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு செய்ய ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்பின் மத்தியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த ஜூன் 22 ம் தேதி தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் லியோ படக்குழுவினர் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நா ரெடி’ பாடலை வெளியிட்டனர். பிறந்த நாள் கோலாகல கொண்டாட்டங்களுடன் நா ரெடி பாடல் மிகப்பெரிய அளவு வைரலானது குறிப்பிடத்தக்கது. ராக்ஸ்டார் அனிருத் இசையில் விஷ்ணு எடவான் எழுதிய இப்பாடலை தளபதி விஜய் அவர்கள் பாட அவருடன் அனிருத் மற்றும் சொல்லிசை கலைஞர் அசல் கோளார் இணைந்து பாடியுள்ளனர். தளபதி விஜயின் ஸ்டைலான நடனத்தோடு அசத்தலான வரிகளுடன் துள்ளனான இசையில் வெளியான நா ரெடி பாடலுக்கு ரசிகர்கள் தொடர்ந்து டிரெண்ட் செய்து வைப் செய்து வருகின்றனர்.

prabhas adipurush 10 days worldwide collection report tweet goes viral

இந்நிலையில் தற்போது லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் இணையத்தில் அதிர விட்டு சாதனை படைத்து வருகிறது. நா ரெடி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி 5 நாட்களில் 31 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் கலக்கி வருகின்றது. மேலும் அதனுடன் 1.9 மில்லியன் லைக்குகளையும் லியோ லிரிக்கல் வீடியோ பெற்றுள்ளது. மேலும் அதை தொடர்ந்து ஸ்பாட்டிபை இசை தளத்தில் நான்கு நாட்களில் ஏறத்தாழ 5 மில்லியன் ஸ்ட்ரீம்களை பெற்றுள்ளது. அசத்தலான இந்த இலக்குகளை தளபதி ரசிகர்கள் தற்போது கொண்டாடி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

MASSIVE 3️⃣0️⃣ MILLION IT IS ❤️‍🔥

#NaaReady from #Leo storming charts 🔥

➡️ https://t.co/p82ebI7E21#Thalapathy @actorvijay @Dir_Lokesh @7screenstudio @anirudhofficial @Jagadishbliss @trishtrashers @duttsanjay @akarjunofficial #LeoFirstSingle pic.twitter.com/cBTGeo8mhD

— Sony Music South (@SonyMusicSouth) June 26, 2023

அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தளபதி விஜயின் வெறித்தனமான நடிப்பில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சினிமா

"CLIMAX வேற லெவல்ல இருக்கும்!"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பக்கா ஆக்ஷன் அப்டேட் கொடுத்த ஸ்டண் சிவா! வீடியோ இதோ

'அடர் காட்டு பகுதியில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா?'- ரத்னகுமார் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!
சினிமா

'அடர் காட்டு பகுதியில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா?'- ரத்னகுமார் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!

'50 ஆண்டுகளுக்குப் பிறகு..!'- பிரபாஸ் - அமிதாப் பச்சனின் ப்ராஜக்ட் K படத்தில் இணைவது பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை!
சினிமா

'50 ஆண்டுகளுக்குப் பிறகு..!'- பிரபாஸ் - அமிதாப் பச்சனின் ப்ராஜக்ட் K படத்தில் இணைவது பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை!