உலகநாயகன் கமல் ஹாசனுக்கு ஆகச்சிறந்த கலைஞன் விருது.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – விவரம் இதோ..

ஆகச்சிறந்த கலைஞருக்கான விருதை வென்ற உலகநாயகன் கமல் ஹாசன் - Kamal haasan honoured outstanding achievement in indian cinema | Galatta

இந்திய சினிமாவில் ஆக சிறந்த கலைஞராக பல தசாப்தங்களாக ரசிகர்கர்களை படத்திற்கு படம் ஆச்சர்யப்படுத்தி வரும் நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன். கருப்பு வெள்ளை காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை தனித்துவமான தன் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இந்திய சினிமாவிற்கே பெருமைமிகு மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார் உலகநாயகன் கமல் ஹாசன்.  

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வசூல் ரீதியாக இமாலய சாதனை படைத்தது. அதை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது எச் வினோத் இயக்கத்தில் புது படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். அதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் கைகோர்த்து புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதனிடையே உலகநாயகன் கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைபடத்தில் நடித்து வருகிறார். மும்முரமாக நடைபெற்று வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் எட்டியுள்ளது. படத்தின் வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தொடர்ந்து ரசிகர்களை இளைஞர்களுக்கு பிடித்தது போன்ற அட்டகாசமான கமர்ஷியல் திரைப்படங்களிலும் எதார்த்த சினிமாவில் நடித்தும் வரும் கமல் ஹாசன் தனது சொந்த தயாரிப்பில் பல முக்கிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 திரைப்படத்தையும் மற்றும் சிலமபரசன் இயக்குனர் தேசிங் பெரியசாமி கூட்டணி அமைத்திருக்கும் ‘STR48’ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். திரைத்துறையில் பல் துறையில் சிறந்து விளங்கும் கமல் ஹாசன் அவர்களை கௌரவ படுத்தும் வகையில் சர்வதேச அளவில் உயரிய விருது வழங்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறது.

அபுதாபி யாஸ் தீவில் வரும் மே 27 ம் தேதி நடைபெறவுள்ள 23 வது IIFA விருது விழா நடைபெறவுள்ளது. இந்திய திரைப்படங்களையும் இந்திய திரை கலைஞர்களையும் கவுரவிக்கும் இந்த விருது விழாவில் இந்திய சினிமாவின் ஆகசிறந்த பங்களிப்பு என்ற பிரிவில் IIFA விருது உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருது IIFA ஆலோசனைகுழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளினால் பரிந்துரைக்கப்பட்டு கொடுக்கப்படும் விருது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் இதனை கொண்டாடி வருகின்றனர். பல தசாப்தங்களாக பல மாநில விருது, தேசிய விருது மற்றும் பல சர்வதேச விருதுகளை வென்ற உலகநாயகன் கமல் ஹாசனுக்கு மேலும் ஒரு கவுரம் என்று ரசிகர்களால் கருத்துகள் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

சினிமா

"விஜயின் தளபதி 68 பட TAGLINE என்ன?"- ஆர்வத்தோடு கேட்ட லியோ தயாரிப்பாளரின் நிறுவனம்... வெங்கட் பிரபுவின் பதில் இதோ!

‘விடாமுயற்சி’ படம் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் குமார் போட்ட திட்டம்.. –இணையத்தில் வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு இதோ..
சினிமா

‘விடாமுயற்சி’ படம் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் குமார் போட்ட திட்டம்.. –இணையத்தில் வைரலாகும் அட்டகாசமான அறிவிப்பு இதோ..

“யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டிய தமிழக ஆளுநர்..  - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டிய தமிழக ஆளுநர்.. - வைரலாகும் பதிவு இதோ..