அனைவராலும் "ஜென்டில்மேன்" என அழைக்கப்பட்டவர்!- சரத் பாபுவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரங்கல் அறிக்கை!

சரத் பாபுவின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இரங்கல் அறிக்கை,south indian artistes association statement on sarath babu demise | Galatta

மக்களின் மனம் கவர்ந்த கலைஞராக கடந்த 50 ஆண்டுகளாக, ஹீரோ வில்லன் குணசேத்திர வேடம் என பல முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் சரத்பாபு இன்று மே 22 ஆம் தேதி காலமானார்.கடந்த 1973 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ராம ராஜியம் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கிய நடிகர் சரத் பாபு 1977 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப் பிரவேசம், நிழல் நிஜமாகிறது, மரோ சரித்ரா உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சரத்பாபு, தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். 1980 - 90களில் காலகட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து முள்ளும் மலரும், நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்த சரத் பாபு, உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, ஆளவந்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக சமீபத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளிவந்த வசந்த முல்லை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத் பாபு நடித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் தற்போது சிகிச்சை பலனின்றி தனது 72 வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது மேலும் பல கோடி ரசிகர்களும் திரையுலகினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சரத் பாபு அவர்களின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்கள் இறங்குவதற்கு வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

“தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரான நடிகர் சரத்பாபு தனது 71-ம் வயதில் உடல்நல குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார். ’பட்டினப்பிரவேசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு. 

இவர் நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து போன்ற பல பிரபல திரைப்படங்களிலும் மற்றும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.  

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் முன்னனி கதாநாயகர்களோடு இணைந்தும் நடித்து வந்துள்ளார். மிக்க அமைதியும் ஆர்பாட்டமில்லாதவராக திரைத்துறையில் வலம்வந்தவர். திரைதுரையை சார்ந்த அனைவராலும் செல்லமாக ”ஜெண்டில்மென்” என்று அழைக்கப்பட்டார், அவருடைய மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் தாங்க முடியாத பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    
அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…
 

#RIPSarathBabu garu pic.twitter.com/1PLDx6v0NL

— nadigarsangam pr news (@siaaprnews) May 22, 2023

“யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டிய தமிழக ஆளுநர்..  - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி” தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டிய தமிழக ஆளுநர்.. - வைரலாகும் பதிவு இதோ..

“AGS  தயாரிப்பில் மிக பிரமாண்ட படைப்பாக தளபதி 68 படம் இருக்கும்..” தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“AGS தயாரிப்பில் மிக பிரமாண்ட படைப்பாக தளபதி 68 படம் இருக்கும்..” தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் – வைரலாகும் பதிவு இதோ..

'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’.! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..  அட்டகாசமான வீடியோ இதோ..
சினிமா

'லியோ' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் ‘தளபதி 68’.! - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..