வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலிSதாணு உடன் கைகோர்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்... புதிய பிரம்மாண்ட பட மாஸ் அறிவிப்பு இதோ!

தயாரிப்பாளர் கலைப்புலி S தாணுடன் கைகோர்க்கும் கிச்சா சுதீப்பின் புதிய படம்,kalaipuli s thanu joins with kiccha sudeep in next movie kiccha46 | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் தயாரிப்பாளர் கலைப்புலி. S. தாணு அவர்கள் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்புடன் இணைகிறார். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த நானே வருவேன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி.S.தாணு  அவர்கள் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை தயாரிக்கிறார். முதல் முறையாக சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஒன்றிணையும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக நுணுக்கமான பிரம்மிக்க வைக்கும் VFX காட்சிகள் வாடிவாசல் திரைப்படத்திற்கு தேவைப்படுவதால் அதற்காக ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முன்னணி நிறுவனத்தோடு இணைந்து லண்டனில் தங்கி இருந்து அந்த CG பணிகளை இயக்குனர் வெற்றிமாறன் தற்போது கண்காணித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. முன்னதாக கடந்த 1997 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமாகி கன்னடத் திரை உலகில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கிச்சா சுதீப், இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா - விவேக் ஓப்ராய் இணைந்து நடித்த ரத்த சரித்திரம் 2 படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார். பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய கிச்சா சுதீப் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். தொடர்ந்து SS.ராஜமௌலியின் பாகுபலி, மற்றும் சல்மான் கானின் தபாங் 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த கிச்சா சுதீப் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ராந்த் ரோனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தனது திரைப் பயணத்தில் 46வது திரைப்படமாக உருவாகும் புதிய #கிச்சா46 திரைப்படத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களுடன் கிச்சா சுதீப் கைகோர்த்துள்ளார். தென்னிந்திய ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளிவந்த இந்த மாஸ் அறிவிப்பை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் யார் மற்றும் நடிகர் நடிகைகள் யார் யார் என்ற எதிர்பார்ப்புகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கிளம்பி இருக்கின்றன. முன்னதாக இந்த அறிவிப்பு வெளிவந்த கொஞ்ச நேரத்திலேயே இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்தது கிச்சா 46 திரைப்படம். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் இதர அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கிச்சன் 46 படத்தை அறிவிக்கும் வகையில் அதிரடியான புதிய வீடியோ ஒன்றை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் தயாரிப்பாளர் தாணு அவர்களும் நடிகர் கிச்சா சுதீப் அவர்களும் நேரில் சந்தித்து கைகுலுக்குகிறார்கள். வீடியோவின் முடிவில் “புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறோம் டீசருடன் உங்களை சந்திக்கிறோம்” என முடிகிறது. அதிரடியான அந்த வீடியோ இதோ…
 

சினிமா

"தளபதி விஜயின் லியோ உடன் மோதும் டைகர்!"- முன்னணி நட்சத்திர நடிகரின் பிரம்மாண்டமான PAN INDIA படம்... மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் GLIMPSE இதோ!

டி ப்ளாக் இயக்குனரும் யூட்யூபருமான எருமசாணி விஜய் தன் காதலி நக்ஷத்ராவை கரம் பிடித்தார்... வைரலாகும் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ!
சினிமா

டி ப்ளாக் இயக்குனரும் யூட்யூபருமான எருமசாணி விஜய் தன் காதலி நக்ஷத்ராவை கரம் பிடித்தார்... வைரலாகும் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட முதல் பாடல் ரிலீஸ் திட்டம்... ஜீவி பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

தனுஷின் கேப்டன் மில்லர் பட முதல் பாடல் ரிலீஸ் திட்டம்... ஜீவி பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்! ட்ரெண்டிங் வீடியோ இதோ