தீபாவளிக்கு ஜப்பான் விருந்து.. மிரட்டலான தோற்றத்தில் கார்த்தி..- பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..

ஜப்பான் படத்தின் அட்டகாசமான வீடியோ உள்ளே - Karthi Japan Birthday special video | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் வித்யாசமான கதாபாத்திரங்களில் தத்ரூபமாய்  நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் கார்த்தி. இந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில்  கார்த்தி நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ உலகளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து கார்த்தியின் ,மதிப்பு மிகப்பெரிய அளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கார்த்தி ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ராஜு முருகன் எளிய மனிதர்களின் உணர்வுகளை சமூக அக்கறையுடன் திரைக்கதை அமைத்து படங்களை கொடுப்பவர் அதன்படி அவர் இயக்கத்தில் வெளியான ‘குக்கூ’, ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ மற்றும் மாடர்ன் லவ் தொடரில் ‘லாலாகுண்டா பொம்மைகள்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ் ஆர் பிரகாஷ் மற்றும் எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் இயக்குனர் ராஜு முருகன் இயக்கி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. கார்த்தி கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனு எமானுவேல் நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் சுனில், இயக்குனர் விஜய் மில்டன், பவா செல்லத்துரை, வாகை சந்திர சேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். படத்தின் அறிவிப்பு, முதல் பார்வை தொடங்கி இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ஜப்பான் வரும் தீபாவளி விடுமுறை தினத்தையொட்டி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ரிலீஸ் குறித்த வெளியீடு நடிகர் கார்த்தி பிறந்த நாளையொட்டி சர்ப்ரைஸாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. பின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Wishing the dynamic & versatile actor our hero @Karthi_Offl, a very Happy Birthday 💐

On this special day, Excited to announce that our #Japan movie is all set to light up this Diwali 💥#JapanFromDiwali #HappyBirthdayKarthi@ItsAnuEmmanuel #Sunil @vijaymilton @gvprakashpic.twitter.com/PJbgI4dg7q

— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 24, 2023

இந்நிலையில் கார்த்தியின் 25 வது திரைப்படமாக உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தின் சிறப்பு காட்சியினை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர். கார்த்தியின் பில்டப் காட்சிகளுடன் ஒரு அறிமுக வீடியோவாக உருவாகியுள்ளது. அட்டகாசமான காமெடி திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது ஜப்பான். தற்போது வெளியாகியுள்ள வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் கார்த்தியின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர், ரசிகர்கள் .. – விவரம் இதோ..
சினிமா

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர், ரசிகர்கள் .. – விவரம் இதோ..

சிறந்த நடிகராக தளபதி விஜய்.. ‘மாஸ்டர்’ முதல் ‘மாநாடு’ வரை சர்வதேச ஒசாகா விருது வென்ற திரைப்படங்கள் – முழு பட்டியல் இதோ..
சினிமா

சிறந்த நடிகராக தளபதி விஜய்.. ‘மாஸ்டர்’ முதல் ‘மாநாடு’ வரை சர்வதேச ஒசாகா விருது வென்ற திரைப்படங்கள் – முழு பட்டியல் இதோ..

“மக்களின் நல்லதுக்காக பண்ணிருக்காங்க..” 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு குறித்து விஜய் ஆண்டனி கருத்து.. விவரம் உள்ளே..
சினிமா

“மக்களின் நல்லதுக்காக பண்ணிருக்காங்க..” 2000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு குறித்து விஜய் ஆண்டனி கருத்து.. விவரம் உள்ளே..