ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த விக்ரம் பட பத்தல பத்தல வீடியோ பாடல் !
By Aravind Selvam | Galatta | July 04, 2022 15:24 PM IST
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,காயத்ரி,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா,ஸ்ரீகுமார்கணேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே கமல்,விஜய்சேதுபதி,பஹத் என பெரும் நடிகர்கள் இருக்கையில் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றியடைந்துள்ளது விக்ரம் படம்.
இந்த படத்தில் Rolex என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த படங்களுக்கு சூர்யா வழிவகுத்துள்ளார்.பல இடங்களில் இன்னும் இந்த படம் வசூல் சாதனை செய்து வருகிறது.இந்த படத்தின் ஓப்பனிங் பாடலான பத்தல பத்தல பாடல் வீடீயோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.இந்த பாடல் தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரிய சாதனை படைத்துள்ளது.
#PathalaPathalaVideo hits 10 M Views
— Raaj Kamal Films International (@RKFI) July 3, 2022
➡️ https://t.co/2wAZh3y5XN#Ulaganayagan #KamalHaasan #Vikram@ikamalhaasan @anirudhofficial @Dir_Lokesh @Udhaystalin @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ @disneyplusHSTam @iamSandy_Off pic.twitter.com/PBAok4Xzct