விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் சீரியலில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.இந்த தொடரில் தனது நடிப்பால் தமிழ் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட ஷிவானி ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.இவரது நடன வீடியோக்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்தார்.இந்த தொடரில் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் ஷிவானி நாராயணன்.சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

சீரியல் நடிகைகளில் தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தையே ஷிவானி பெற்றுள்ளார்.பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசனில் இவர் முக்கிய போட்டியாளராக பங்கேற்றார் ஷிவானி.பிக்பாஸில் இருந்து வெளியேறிய சில படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து வருகிறார் ஷிவானி.சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக பம்பர் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் சில புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.