தமிழ் திரையுலகின் MOST-WANTED இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் தளபதி விஜய் இணையும் #தளபதி67 திரைப்படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான கைதி திரைப்படம் அனைத்து சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. மேலும் தற்போது பாலிவுட்டில் கைதி திரைப்படம் ரீமேக் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அஜய் தேவ்கன் மற்றும் தபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கைதி ரீமேக்கான போலா திரைப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், T சீரிஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் திகதி போலா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் போலா திரைப்படத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக போலா திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் தர்மேந்திர ஷர்மா இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடிகர் அஜய் தேவ்கனே இயக்கி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அதேபோல்தான் அஜய் தேவ்கன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு இதோ…
 

It's time to say ACTION again!

Bholaa releasing on March 30th, 2023. pic.twitter.com/fGyycOFPIT

— Ajay Devgn (@ajaydevgn) July 4, 2022