இந்தியத் திரை உலகின் மிகப்பெரிய ஆளுமையான உலகநாயகன் கமல்ஹாசன் வெறும் நடிகர் மட்டுமல்ல. நடன இயக்குனர், எழுத்தாளர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞானி கமல்ஹாசன். வெள்ளித்திரையில் பல உச்சங்களைத் தொட்ட சகலகலா வல்லவனான உலகநாயகன் சின்னத்திரையிலும் அதை தொடர்கிறார். 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.இதுவரை தமிழில் 4 பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். 

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர்களாக தமிழகத்தின் பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்கள் உலா வரும் நிலையில், வருகிற அக்டோபர் மாதத்திலிருந்து பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ முதல் ப்ரோமோ வீடியோ  வெளியானது. உலகநாயகன் கமல்ஹாசனின் கலக்கலான இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.