தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு காலத்தால் அழியாத சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கடைசி திரைப்படமாக வெளிவர உள்ள திரைப்படம் லாபம்.

உழைக்கும் மக்களுக்கான அரசியலை சரியாக பேசும் சிறந்த இயக்குனரான எஸ்.பி.ஜனநாதனின் லாபம் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை சுருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க ஜெகபதிபாபு, சாய் தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக், ப்ரித்வி ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் மற்றும் 7C's என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள லாபம் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் லாபம் ரிலீசாகிறது.

இந்நிலையில் லாபம் திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் இன்று வெளியானது. அதிரடியான இந்த புதிய ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் புதிய ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.