“மாதம் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணை, அந்த பெண்ணின் தந்தை, அதிக ரேட் வைத்து 3 பேரிடம் பல லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான், பெற்ற மகளுக்கு அவரின் தந்தையாலேயே இப்படி ஒரு உச்சபட்சமான கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஒரு சாதாரண கூவழ தொழிலாளி தனது டீன் ஏஜ் மகளுடன் வசித்து வந்தார். அவருக்கு மனைவி இல்லாத நிலையில், தனது மகளுக்கே சாப்பாடு போடுவது மிகவும் சிரமமா இருந்து உள்ளது.

போதா குறைக்கு, தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கும் பிறப்பாக்கப்பட்ட காரணத்தால், போதிய வருமானம் இல்லாமல் அந்த இளம் பெண்ணின் தந்தை கடும் வறுமையில் தள்ளப்பட்டு இருக்கிறார்.

இதனால், வேறு வழியின்றி, அந்த தந்தை தனது டீனேஜ் மகளை, முதலில் ஒரு பெண் தரகர் உதவியுடன், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஒருவருக்கு ஒரு நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதித்து உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், தந்தையை மீறி எதுவும் செய்ய முடியாமல், வேறு வழியும் இல்லாமல் அந்த பெண், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு சென்று உள்ளார். 

குறிப்பாக, இந்த இளம் பெண்ணை அதிக விலை கொடுத்து வாங்கிய அந்த நபர், அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த பானங்களை கொடுத்து, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

இதனால், அந்த பெண்ணிற்கு உடல் நிலை மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், இனிமேல் இந்த பெண்ணை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்த அவர், அந்த பெண்ணின் தந்தையிடமே, அந்த பெண்ணை திருப்பி ஒப்படைத்து உள்ளார்.

இதனையடுத்து, தந்தையிடம் அந்த பெண் திரும்பிய நிலையில், அந்த பெண்ணின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

அதன் பிறகு, அங்குள்ள நந்தூர்பாரைச் சேர்ந்த 45 வயதான ஒருவரிடம் அந்த இளம் பெண்ணின் தந்தை, 2 லட்சம் ரூபாய்க்கு மீண்டும் தனது மகளை விற்று உள்ளார். 

ஆனால், இந்த பணம் பல தவணைகளா செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், விலைக்கு வாங்கி நபர், அந்த இளம் பெண்ணை சுமார் 8 மாதங்களாகத் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில், பேசப்பட்ட விலையில் கடைசி தவணையை வாங்கிய நபரால் செலுத்த முடியாத காரணத்தால், அவளுடைய தந்தை தனது மகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

அதன் பிறகு, அடுத்த சில நாட்கள் கழித்து, அந்த இளம் பெண்ணின் தந்தை, தனது மகளை சதாராவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிக விலைக்கு விற்றிருக்கிறார்.

அந்த இளம் பெண்ணை பணம் கொடுத்து வாங்கிய அந்த நபர், அந்த இளம் பெண் தொடர்ச்சியாகப் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில், இது போன்ற பாலியல் பலாத்கார கொடுமைகளைத் தாங்க முடியாமல் வலியால் துடிதுடித்த அந்த இளம் பெண், தனக்கு நேரும் கொடுமைகள் பற்றி, தனது அத்தை மற்றும் சக உறவினர்களுக்கு போனில் கூறி அழுது உள்ளார். 

மேலும், “என்னை இங்கிரு காப்பாற்றுங்கள்” என்று, கெஞ்சி அழுது உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் உறவினர்கள், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அந்த இளம் பெண்ணின் தந்தை முதல் குற்றவாளியாகக் கைது செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.