இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் திரைப்படமான  தலைவி படத்தில் கங்கனா ரனாவத் ஜெ.ஜெயலலிதா அவர்களின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகும்  தலைவி திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். மேலும் இயக்குனர் சமுத்திரக்கனி, நடிகை பூர்ணா, நடிகை மதுபாலா மற்றும் நடிகர் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக தலைவி திரைப்படத்தின் டீசர் & டிரைலர் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி தலைவி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்ததாக தலைவி படத்தின் புதிய பாடலும் வெளியாக உள்ளது.

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள தலைவி திரைப்படத்திலிருந்து கண்ணும் கண்ணும் பேச பேச என்னும் புதிய பாடல்  நாளை வெளியாக உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது. ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அழகான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்