தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் தூ.பா.சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அடுத்ததாக அரிமா நம்பி, இருமுகன் & நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான எனிமி திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.

விஷால் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து நடிகைகள் மிருணாளினி ரவி & மம்தா மோகன்தாஸ் மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள எனிமி படத்தின் பாடல்களை S.தமன்  இசையமைக்க இசையமைப்பாளர் சாம்.C.S. பின்னணி இசையமைத்துள்ளார்.

இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் எனிமி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷால் தனது டப்பிங்கை தொடங்கியுள்ளார். நடிகர் விஷால் எனிமி டப்பிங்கில் ஈடுபடும் வீடியோவையும் தனது ட்விட்டர் வெளியிட்டு உள்ளார். வைரலாகும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.