தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் முகென் ராவ். மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் தமிழில் பல சுயாதீன பாடல்களை பாடியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த முகேன் ராவ் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் இயக்குனர் கவின் இயக்கத்தில் தயாராகும் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். 

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ள வேலன் திரைப்படத்தில் பிரபு,ஹரீஷ் பரேடி,தம்பி ராமய்யா,சூரி,மரியா வின்சென்ட்,பிரிகிடா,ப்ராங்க் ஸ்டார் ராகுல்,பில்லி முரளி ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் வேலன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியானது. பிரபல தமிழ் பாடகர் வேல்முருகன் பாடியுள்ள டண்டணக்கா டண்டணக்கா தவுலடி என்னும் பாடலை இசையமைப்பாளர் அனிருத் இன்று வெளியிட்டார். கலக்கலான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.