கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து  என்றென்றும் ரசிகர்களின் இதயம் விட்டு நீங்காத இடம் பிடித்துள்ள உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் முக்கியமான சிறப்பு கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.  லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

லால் சலாம் படத்தை தொடர்ந்து மீண்டும் லைகா தயாரிக்கும் புதிய படத்திலும் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் திருப்பதியில் தரிசனம் முடித்த கையோடு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து கடப்பாவிலுள்ள பழமையான அமீன் தர்காவிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு செய்துள்ளார். மதங்களை கடந்து ரஹ்மானுடன் இணைந்து தர்காவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோ இதோ…
 

கடப்பா அமீன்தர்காவில் ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் பிரார்த்தனை !@rajinikanth @arrahman #Rajinikanth𓃵 #ARRahman #AmeenpeerDargah #AmeenDargah #Kadapa pic.twitter.com/ydELDAw86F

— Galatta Media (@galattadotcom) December 15, 2022