ஆகச்சிறந்த நடிகராக தரமான கதை களங்களையும் நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகர் கார்த்தி, அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக தயாராகும் ஜப்பான் திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். கடந்த நவம்பர் 8-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்ட ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவில், GV.பிரகாஷ் குமார் இசையமைக்கும் ஜப்பான் படத்திற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.  தமிழ், மலையாளம், தெலுங்கு & கன்னடம் என 4 மொழிகளில் ஜப்பான் திரைப்படம் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் மலையாள சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் சணல் ஆமன் கார்த்தி உடன் இணைந்து ஜப்பான் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னதாக மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து பல மொழி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற மாலிக் படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்த சணல் ஆமன் தற்போது கார்த்தியுடன் ஜப்பான் படத்தில் இணைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து கார்த்தி உடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Sanal Aman (@sanalaman)