ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் அதிரடியான நடிப்பில் தயாராகியிருக்கும் விக்ரம் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக உருவாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக விக்ரம் படத்தில் இருந்து வெளிவந்த “பத்தல பத்தல” பாடல் யூடியூபில் ட்ரெண்டாகியுள்ள நிலையில், தொடர்ந்து வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இதனிடையே உலகநாயகன் கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்படத்தின் ருசிகர தகவல்களை பகிர்ந்துள்ளார்.

விக்ரம் திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் “உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர். இதில் செய்தியாளர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உலக நாயகன் சிறப்பாக பதில் அளித்தார். அந்த வகையில் “இந்தியன் 2 திரைப்படம் எப்போது?” என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இந்தியன் 2 திரைப்படம் கட்டாயம் நடைபெறும்… அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 குறித்து கமல்ஹாசன் பேசிய வைரல் வீடியோ இதோ…