திருடனை லாரியின் முன்பக்கம் கட்டி தொங்கிட்ட கொடூரம்!  3 கி.மீ ஊர்வலமாக சென்ற லாரியால் பரபரப்பு..

திருடனை லாரியின் முன்பக்கம் கட்டி தொங்கிட்ட கொடூரம்!  3 கி.மீ ஊர்வலமாக சென்ற லாரியால் பரபரப்பு.. - Daily news

“செல்போன் திருடியதாக” கூறி, ஒரு திருடனை லாரின் முன்பக்கம் கட்டி வைத்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் லாரி ஓட்டிச் சென்று கொடூரமான தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள மார்ஷாகாய் என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கஜேந்திரா ஸ்வைன் என்பவர், அந்த பகுதியில் பகுதி நேரமாக லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

இப்பியான சூழலில் தான் அவர், அந்த பகுதியில் உள்ள மற்ற லாரி ஓட்டுநர்களிடம், “எனக்கு வேலை ஏதும் இருக்கிறதா?” என்று உதவி கேட்டு வந்திருக்கிறார்.

அப்போது, ஒரு லாரி ஓட்டுநர் தனது “செல்போனை காணவில்லை” என்று, சத்தம் போட்டு கத்தி உள்ளார். 

அப்போது, அங்கிருந்த மற்ற லாரி ஓட்டுநர்கள், கஜேந்திராவை பிடித்து வைத்துக்கொண்டு, அவரை மிரட்டி விசாரித்து உள்ளனர்.

அப்போது, அவர் தான் இந்த செல்போன் திருடியது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அந்த செல்போனை திருடிய கஜேந்திராவை, அடித்து உதைத்து துன்புறுத்திய மற்ற லாரி ஓட்டுனர்கள், அவருக்கு செருப்பு மாலை போட்டு அவரை, அசிங்கப்படுத்தி உள்ளனர்.

இவற்றுடன், அவரை விடாமல், அங்குள்ள ஒரு லாரியின் முன் பகுதியில் அந்த திருடனை கட்டி தொங்க விட்டு, அவரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஊர்வலமாக அழைத்துச் செல்லும் வகையில், அந்த லாரியை ஓட்டிச் சென்று உள்ளனர். 

இப்படியான, இந்த கொடுமையைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒருவர், இதனை வீடியோவாக எடுத்து சமூகடி வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார். 

இதனால், இந்த வீடியோ வேகமாக வைரலாகி வரும் நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஷ

குறிப்பாக, இந்த வீடியோவைப் பார்த்த ஒடிசா மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து உள்ளது.

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட லாரி டிரைவர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

மேலும், “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று, அங்குள்ள ஜகத்சிங்பூர் காவல் கண்காணிப்பாளருக்கு மனித உரிமை ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. என்றாலும், இந்த வீடியோவால் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment