தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகியாகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழும் நடிகை நயன்தாரா முதல்முறை பாலிவுட் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக்காக தெலுங்கில் தயாராகும் காட்ஃபாதர் திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து நடித்து வருகிறார். இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் காட்ஃபாதர் திரைப்படத்தில் சல்மான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்திவிராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த GOLD திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களின் வரிசையில்  மீண்டும் நேரடியாக OTTயில் ரிலீசாகவுள்ள திரைப்படம் O2. 

இயக்குனர் G.S.விக்னேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள O2 திரைப்படத்தில் ரித்து ராகஸ் யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்த ரித்விக் நயன்தாராவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் O2 படத்தின் முதல் பாடலாக சுவாசமே பாடல் தற்போதுவெளியானது. விஷால் சந்திரசேகர் இசையில் ராஜேஷ் கிரிபிரசாத் மற்றும் மோகன் ராஜன் இணைந்து எழுதியுள்ள சுவாசமே பாடலை பிருந்தா சிவகுமார் பாடியுள்ளார். O2 திரைப்படத்தின் சுவாசமே பாடல் இதோ…