கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப் கதாநாயகனாக மட்டுமல்லாமல் பல முக்கிய கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். குறிப்பாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிறமொழி ரசிகர்களுக்கும் ஃபேவரட் நடிகரானார்.

அந்தவகையில் அடுத்ததாக கிச்சா சுதீப் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள விக்ராந்த் ரோணா திரைப்படத்தை பிரபல இயக்குனர் அனுப் பண்டாரி எழுதி இயக்கியுள்ளார்.

கிச்சா சுதீப் நடிப்பில் பிரம்மாண்டமான ஃபேண்டஸி-ஆக்ஷன் அட்வென்ச்சர் திரைப்படமாக உருவாகியிருக்கும் விக்ராந்த் ரோணா திரைப்படத்தில் சுதீப் உடன் இணைந்து நிரூப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரவி சங்கர் கௌடா, மதுசூதன் ராவ் மற்றும் வாசுகி வைபவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ராந்த் ரோணா படத்திற்கு வில்லியம் டேவிட் ஒளிப்பதிவில் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை 28-ம் தேதி விக்ராந்த் ரோணா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விக்ராந்த் ரோணா திரைப்படத்திலிருந்து ரா ரா ராக்கம்மா பாடல் தற்போது வெளியானது. துள்ளலான அந்த பாடல் இதோ…