இந்திய திரை உலகின் ஈடுஇணையற்ற திரை கலைஞராக திகழும் உலக நாயகன் கமல்ஹாசன் தனது 60 ஆண்டுகால திரைப் பயணத்தை கடந்து இன்றும் அதே தாகத்தோடும் வேகத்தோடும் கலையின் மீது தீராத மோகத்தோடும் ரசிகர்களின் ரசனையை மேம்படுத்தும் வகையில் மிகச் சிறந்த படைப்புகளை வழங்கி வருகிறார்.

அந்தவகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், ரமேஷ் திலக், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ், மேகா ஆகாஷ், ஆடுகளம் முருகதாஸ், ஷிவாணி நாராயணன் உள்ளிட்ட பலர் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் விக்ரம் படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய ஃபிலொமின்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகிவரும் விக்ரம் படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பல கட்டங்களாக நடைபெற்று வந்த விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு (2022) வருகிற ஜூன் 3-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக விக்ரம் திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இன்று (மார்ச் 14 ஆம் தேதி) வெளியானது. மிரட்டலான அந்த வீடியோ இதோ…