இந்திய திரை உலகின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மலையாளத்தில் 19(a)(1) திரைப்படமும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து நடித்துள்ள காந்தி டாக்ஸ் மௌனப் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. 

தொடர்ந்து தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் என வரிசையாக விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இதனிடையே புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்திப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் மைக்கேல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திவ்யான்ஷா கௌசிக் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, வில்லனாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண்.C.புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வருண் சந்தேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.