தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் ரத்தம் திரைப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வருகிறார். பொலிட்டிக்கல் க்ரைம் த்ரில்லர் படமாக தயாராகும் ரத்தம் திரைப்படத்தில் மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகிய கதாநாயகிகள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ரத்தம் திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததை அடுத்து இறுதிகட்ட படப்பிடிப்பு கொல்கத்தா மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற நிறைவடையவுள்ளது. ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் ரத்தம் படத்திற்கு N.கண்ணன் இசை அமைக்கிறார்.

முன்னதாக தனது முதல் திரைப்படமாக இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் முதல் முழுநீள SPOOF திரைப்படமாக தயாராகி வந்த தமிழ் படம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் 2.O திரைப்படம் வெளியாகி அதுவும் வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து வந்த இயக்குனர் C.S.அமுதன், ரசிகர் ஒருவர், “தமிழ் படம் 3.O எப்போ அண்ணா?” என கேட்க அதற்கு இயக்குனர் C.S.அமுதன், “எல்லோரும் எடுத்து முடிக்கட்டும்” என பதிலளித்துள்ளார். எனவே தமிழ் படம் 1&2 போல 3-வது பாகம் தயாராகும் என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. இயக்குனர் C.S.அபதிவின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவு இதோ…