11 ஆம் வகுப்பு மாணவனோடு 26 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர் ஓடிப்போனதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தைச் சோ்ந்த ஞானமலா் என்பவரின் 17 வயது மகன் ஒருவர், துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த சூழலில் தான், கடந்த 5 ஆம் தேதி விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அந்த மாணவன், இரவு நீண்ட நேரம் ஆகியும் அந்த மாணவன் வீடு திரும்பவில்லை.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த மாணவினின் நண்பர்களின் வீடு உள்ளிட்ட அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் தேடி பார்த்து உள்ளனர். 

ஆனால், எங்கு தேடியும் அந்த மாணவன் கிடைக்காத நிலையில், இது குறித்து அந்த மாணவனின் நண்பர்களிடம் அவர்கள் விசாரித்து உள்ளனர்.

அப்போது, அந்த மாணவன், “நண்பர்களுடன் விளையாட செல்லவில்லை” என்பது தெரிய வந்தது.

குறிப்பாக, “அந்த மாணவன் அதே பள்ளியில் பணியாற்றும் அந்த மாணவனின் வகுப்பு ஆசிரியையான 26 வயதான சர்மிளா டீச்சருடன் வீட்டை விட்டு மாயமானதாக” கூறப்படுகிறது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவனின் பெற்றோர், துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையின் போது, மாணவர் காணாமல் போன அன்றே, குறிப்பிட்ட அந்த வகுப்பு ஆசிரியையும் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

அதாவது, அந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த சிக்கந்தம்பூர் பகுதியை சோ்ந்த சர்மிளா உடன், அந்த மாணவன் சென்றிருக்கலாம் என்று, சந்தேகப்படுவதாக அந்த மாணவரின் தாயார் சந்தேகப்படுவதாகவும் போலீசாரின் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும், பள்ளி ஆசிரியை மாயமானது தொடர்பாக அவர் சார்பில் யாரும் இதுவரை போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும், கூறப்படுகிறது.

குறிப்பாக, மாணவரும் ஆசிரியையும் ஒரே நாளில் மாயமாகி உள்ளதால் இருவரும், சேர்ந்து வீட்டை விட்டு ஓடியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது.