தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள் மன்மதலீலை மற்றும் ஹாஸ்டல் ஆகிய மூன்று திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாஷம்) திரைப்படத்தில் நடித்துவரும் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படமாக வேழம் திரைப்படமும் தயாராகி வருகிறது.

இதனிடையே மாயம் செய்தாய் பூவே எனும் மியூசிக் வீடியோவில் அசோக் செல்வன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் பிரணவ் கிரிதரன் இசை அமைத்துள்ள மாயம் செய்தாய் பூவே பாடலை அமித் கிருஷ்ணன் இயக்க, அசோக்செல்வன் உடன் இணைந்து மாளவிகா ஜெயராம் நடித்துள்ளார்.

கோபிநாத் துரை ஒளிப்பதிவில் வீணா ஜெயப்பிரகாஷ் படத்தொகுப்பு செய்துள்ள மாயம் செய்தாய் பூவே பாடலை ஸ்டூடியோ MO.C.A தயாரிக்க திங்க் இண்டி நிறுவனம் வெளியிட்டது. அசோக் செல்வனின் மாயம் செய்தாய் பூவே மியூசிக் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மியூசிக் வீடியோ இதோ…