மதுரை உயர்நீதி மன்ற கிளை  வன்னியர்களுக்கு 10.5 சதவீதம்  இட ஒதிக்கீடு ரத்து  செய்தது

 

 

வன்னியர்களுக்கான 10.5 சதவீகிதம் உள் ஒதுக்கீடு ரத்து செய்து மதுரை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்தை ரத்து செய்ய கோரி 25 மேலான வழக்குகள்  தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசாமி , முரளிசங்கர் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களும் இருந்தனர் ஆனால் வன்னியர்கள் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் செய்தனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின் தங்கிய வகுப்பினருக்கான 20 % இட ஒதுக்கீட்டில்  வன்னியர்களுக்கு 10.5% கடந்த ஆட்சியில் வழங்கி தமிழக சட்டமனறத்தில் பிப்ரவரி 26ம் தேதி சட்டம் இயறட்பட்டது.

 

பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகிதமும் ஆதிதிராவிடர்களுக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு ஒரு சதவிகிதமும் என இருந்தது வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 சதவிகிதம் மட்டுமே கிடைக்கும் என்றும் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள இதர சாதியினர் கடுமையாக பாதிக்கப்படுவதாக பல எதிர்ப்புகள் கிளம்பியது.இதனை அடுத்து இட ஒதுக்கீடு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இது தொடர்பாக மாநில ஐகோர்ட் அணுகுமாறு தெரிவித்தன.

highcourt

விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் இச்சட்டம் இயற்ப்பட்டுள்ளது எனவே இதனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. தமிழக அரசுத்தரப்பில் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது . தமிழ்நாடு நல ஆணையம் 1983ல்

நடத்திய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 13.01 சதவீதம் என்ற அளவில் 65,04,855 வன்னியர்கள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. இதில் அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதுமில்லை என வாதிட்ட்டது.

வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில அரசுக்கு சாதி அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? முறையான வரையறுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் இன்றி இதுபோல உள் இட ஒதுக்கீட்டை வழங்கலாமா? அப்படி வழங்கினால் அது சட்ட விரோதமானதாகுமா? என்பது போன்ற 7 வினாக்களின் அடிப்படையில் வாதங்களை பகுப்பாய்ந்ததில், அரசு தனது சட்ட எல்லையை மீறி வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அரசுத்தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் போதுமானதாக இல்லை எனக்கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.