தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் கடைசியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் வெப் சீரிஸில் தங்கம் எனும் எபிசோடில் நடித்து கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மேலும் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படமும் விரைவில் ரிலீசாகவுள்ளது. 

இந்த வரிசையில் இந்திய திரை உலகின் சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகியிருக்கும் ஜாக் அண்ட் ஜில் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சுவாரியர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் சேவாஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள ஜாக் அண்ட் ஜில் படத்தில் சோபின் சாஹீர், நெடுமுடி வேணு, அஜு வர்கீஸ், ஷைலி கிரிஷன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர் மற்றும் கோபி சுந்தர் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் ஜாக் அண்ட் ஜில் படம் தற்போது தமிழில் சென்டிமீட்டர் என ரிலீசாகிறது. தமிழில் முக்கிய வேடத்தில் நடிகர் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  சென்டிமீட்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…