தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன்.

காதல் கொண்டேன்,புதுப்பேட்டை,மயக்கம் என்ன படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக செல்வராகவன் தனுஷுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த படத்தினை தமிழகத்தின் வெற்றிகரமான முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு , வி கிரியேஷன்ஸ் சார்பில்  தயாரித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு,ஸ்வீடன் நடிகை Elli AvrRam,செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

செப்டம்பர் 29ஆம் இந்த படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தின் தயாரிப்பாளர் தாணு பட ரிலீசுக்கு பிறகு கலாட்டாவிற்கு பிரத்யேக பேட்டி ஒன்று அளித்துள்ளார்.அதில் படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டது அதிர்ச்சி அளித்ததாகவும் அதுகுறித்து முக்கிய திரையரங்கத்திற்கு மெசேஜ் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.பெரிய லீவ் இருக்கும் வாரத்தில் 60% பொன்னியின் செல்வன் மற்றும் 40% நானே வருவேன் என இருந்த போது , சில இடங்களில் காட்சிகள் குறைக்கப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்