மாடலாக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகையாக கலக்கி வருபவர் ஹிமா பிந்து.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் ஹிமா பிந்து.

இந்த தொடரில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் ஹிமா பிந்து.இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதயத்தை திருடாதே தொடர் 2 சீசன்கள் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.இவர் அடுத்து எப்போது சீரியலில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் புது சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இலக்கியா என்ற தொடரில் ஹிமா பிந்து ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த தொடரில் இவருடன் இணைந்து பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.சீரியலின் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.