தென்னிந்திய திரை உலகின் நட்சத்திர நாயகியாக ஏற்றுக்கொள்ளும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் வருகிற ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. மகாபலிபுரத்தில் நடைபெறவிருக்கும் இந்த திருமண நிகழ்ச்சியை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் காட்ஃபாதர் படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக ஹிந்தியில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார்.

மேலும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள கோல்ட் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. தொடர்ந்து தமிழில் ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகும் கனெக்ட் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக இயக்குனர் G.S.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் O2. 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ் பாபு & S.R.பிரபு தயாரித்துள்ள O2 திரைப்படம் விரைவில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா.R.K படத்தொகுப்பு செய்ய, முன்னணி இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் O2 திரைப்படத்தின் ட்ரைலர் நாளை ஜூன் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.