தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக பல வருடங்களாக ஜொலித்து வருபவர் காஜல் அகர்வால்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று தென்னிந்திய மொழிகளில் கலக்கி தனக்கென்று ஒரு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் காஜல் அகர்வால்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார் காஜல் அகர்வால்.

ஜெயம் ரவி நடிப்பில் இவர் ஹீரோயினாக நடித்த கோமாளி படம் 100 நாட்களை கடந்து பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2,சிரஞ்சீவி நடிப்பில் ஆச்சார்யா,ஹே சினமிகா உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு 2020-ல் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது.திருமணத்துக்கு பிறகும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தி வந்தார் காஜல்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.

நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இவரது கணவர் 2022 எதிர்நோக்கி என்று கர்பமாக இருக்கும் பெண்ணின் ஸ்மைலியுடன் பதிவிட்டு காஜல் கர்பமாக இருப்பதை உறுதிசெய்தார்.ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை காஜலுக்கு தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.