தமிழ் திரை உலகில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா என மூவரும் முன்னணி கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், இளையதிலகம் பிரபு , ரெட்டின் கிங்ஸ்லீ மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காத்துவாக்குல 2 காதல்  திரைப்படத்திற்க்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரெண்டு காதல் & TWO TWO TWO பாடல்கள் நல்ல வரவேற்பைப்பெற்றது 

இந்நிலையில்  காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் 3வது பாடலின் அறிவிப்பை புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நான் பிழை எனும் இந்த புதிய பாடல் வருகிற ஜனவரி ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய் சேதுபதி & நயன்தாராவின் காத்துவாக்குல ரெண்டு காதல் புதிய போஸ்டர் இதோ…