தமிழில் சுயாதீன இசைக் கலைஞராக தனது பாடல்களின் மூலம் தமிழ் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, தமிழ் சினிமாவிலும் இசையமைப்பாளராக பல ஃபேவரட் பாடல்களை கொடுத்து வருகிறார். தொடர்ந்து கதாநாயகனாகவும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக சமீபத்தில் வெளிவந்த ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் திரைப்படம் இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக  இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு  திரைப்படத்தில் முதல் முறையாக அன்பு-அறிவு என டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. 

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து காஷ்மிரா பரதேசி & ஷிவானி ராஜசேகர் கதாநாயகிகளாக நடிக்க, நெப்போலியன், ஆஷா சரத், விதார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

அன்பறிவு திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீசாகிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள அன்பறிவு படத்திலிருந்து முன்னதாக வெளிவந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாடலாக கனவுகள் பாடல் வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகி வரும் கனவுகள் பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.