மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.நானும் ரௌடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

நயன்தாரா மற்றும் சமந்தா இந்த படத்தில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.பிரபு,ஸ்ரீசாந்த்,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இது அனிருத்தின் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான வரவேற்பை ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெற்றி குறித்து பட தயாரிப்பாளர் லலித் குமார் படத்தில் பணியாற்றிய இயக்குனர் விக்னேஷ் சிவன்,மக்கள் செல்வன் விஜய்சேதுபதி,அனிருத்,நயன்தாரா,சமந்தா மற்றும் முக்கிய படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.இந்த படத்தினை பெரிய வெற்றி படமாக மாற்றிய ரசிகர்கள்,ஊடகத்துறையினர் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.