நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையில் கண்ட ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்று செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக விளங்கும் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருண்மொழி வர்மன் எனும் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினி மற்றும் மந்தாகினி என இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பெரிய மற்றும் சிறிய பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன், சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரியாக இளைய திலகம் பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, மதுராந்தகராக ரஹ்மான், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு இணைந்து ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தி முதல் காட்சி பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து வெளியில் வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, திரைப்படம் எப்படி இருக்கிறது? ராஜாவாக ஜெயம் ரவி எப்படி இருக்கிறார்? என்று கேட்ட கேள்விக்கு “திரைப்படம் அருமையாக இருக்கிறது… கட்டாயம் திரையரங்குகளில் பாருங்கள்… நல்ல ஒரு அனுபவமாக இருந்தது… ராஜாவாக பார்க்க ரொம்ப பயங்கரமாக இருக்கிறார்.. நன்றி…” என தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி குறித்து ஆர்த்தி பேசிய அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)