தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.இவர் நடிப்பில் கடைசியாக இவரது 25ஆவது திரைப்படமான பூமி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அஹ்மத் இயக்கத்தில் ஜன கன மன,மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்,அகிலன்  உள்ளிட்ட சில முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் JR30 படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

ராஜேஷ் இந்த படத்தினை இயக்குகிறார்.ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் படத்தினை ஆண்டனி பாக்கியராஜ் இயக்குகிறார்.ஹோம் மூவி மேக்கர்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.சைரன் என இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தின் மற்றுமொரு ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் பூஜை வீடீயோவையும் படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.