தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.

இவரது திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடைசியாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.அதில் சில படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இந்த படத்தினை தயாரித்துளளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு,ஸ்வீடன் நடிகை Elli AvrRam,செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடல் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் படம் செப்டம்பர் 2022ல் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.இந்த முதல் பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஒரே ஒரு
ஊருக்குள்ளே,
இரண்டு ராஜா இருந்தாராம்..
ஒரு ராஜா நல்லவராம்,
இன்னொரு ராஜா கெட்டவராம் 🏹#Naanevaruven @selvaraghavan @theVcreations pic.twitter.com/fZCDa1OdN4

— Dhanush (@dhanushkraja) September 5, 2022