தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து சிகரம் தொட்ட சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் கடைசியாக நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

கமலின் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினார் சூர்யா.இதனை அடுத்து பாலாவின் வணங்கான்,சிவா இயக்கத்தில் சூர்யா 42 படங்களில் நடித்து வருகிறார் சூர்யா.வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவுள்ளார்.இன்று இவர் நடித்த முதல் படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

நடிகர்,தயாரிப்பாளர் என பல பரிமாணங்களை ஏற்றுள்ள சூர்யா தனது வித்தியாசமான ரசிகர்களுக்கு பிடித்தமான தரமான படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா.சினிமாவை தாண்டி நல்ல மனிதராகவும் தனது அகரம் தொண்டு நிறுவனம் மூலம் பல ஏழை எளிய மாணவர்களை படிக்க வைத்து உதவி செய்து வருகிறார்.இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உலகம் முழுவதும் இருக்கிறது.

25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சூர்யாவிற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தன்னை வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.அழகான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள்,கனவில் நம்பிக்கை வைத்தால் சாதிக்கலாம் இப்படிக்கு சூர்யா என பதிவிட்டுள்ளார்.இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.