இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் ஆதித்யா ராம் குழுமத்தின் நிறுவனரும் , மேனேஜிங் டைரக்டருமான ஆதித்யா ராம்.தனது விடாமுயற்சியாலும்,கடின உழைப்பாலும் பெரிய உச்சத்தை தொட்டு பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார் ஆதித்யா ராம்.சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த கலாட்டாவின் பிரம்மாண்ட விருது விழாவான கலாட்டா கிரௌன் 2022 விருதுகளின் ஒரு முக்கிய டைட்டில் ஸ்பான்சராக விளங்கினார் ஆதித்யா ராம் தான். 

இந்த விருது விழாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா,இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர்,ரம்யா கிருஷ்ணன் , இன்னும் சில முன்னணி பிரபலங்களுக்கும் அவர் விருது அளித்து கௌரவித்தார்.அவர் பிசினஸ்மேன் தானே அவருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்மந்தம் என பல ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்,ஆதித்யா ராம் அவ்வர்களுக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரிய தொடர்பு உள்ளது அதுகுறித்து தற்போது பார்க்கலாம்

பிஸினஸ் ஒரு பக்கம் செய்து வந்தாலும் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து சினிமாவிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் ஆதித்யா ராம்.முதலில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து 4 படங்களை தயாரித்துள்ளார் ஆதித்யா ராம்.அதில் பாகுபலி பிரபாஸ் ஹீரோவாக நடித்த Ek Niranjan படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் தயாரிப்பது மட்டுமின்றி சென்னை ECR-ல் பிலிம் சிட்டி ஒன்றையும் வைத்துள்ளார் ஆதித்யா ராம்.சென்னையில் உள்ள பிரபல ஷூட்டிங் தளமாக மாறியுள்ளது.பல முக்கிய படங்களின் ஷூட்டிங் ஆதித்யா ராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சாப்பாடு போன்ற இதர செலவுகள் ஷூட்டிங் போக சாப்பாடு செலவுகளும் பிலிம் சிட்டியில் இருப்பதையே பயன்படுத்த வேண்டும் என்பது போல இருக்கும் , ஆனால் இங்கு அதுபோல் இல்லாமல் ப்ரொடக்ஷன் செலவுகளை குறைப்பதை போல ஷூட்டிங் தளம் மட்டுமே வாடகைக்கு விடுவது போல அமைத்து கொடுத்துள்ளார்.இதன்மூலம் தயாரிப்பு நிறுவனுங்களுக்கு கணிசமான தொகையை குறைத்து கொடுக்கும்.அத்துடன் இந்த பிலிம் சிட்டி ECR-ல் அமைந்துள்ளதால் , பல திரைத்துறையினரும் அந்த ஏரியாவை சுற்றியே அமைந்திருக்கும் இது போக்குவரத்து செலவையும் கணிசமாக குறைக்கும் படி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி பல உதவிகளை செய்வது போல ஆதித்யா ராம் பிலிம் சிட்டி அமைந்துள்ளது.

பல படங்களின் ஷூட்டிங்குகள் தொடர்ந்து இந்த பிலிம் சிட்டியில் இந்த ஆதித்யா ராம் பிலிம் சிட்டியில் தற்போது 3 பிரம்மாண்ட படங்களின் ஷூட்டிங்குகள் நடைபெற்று வருகின்றன பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் அட்லீ இயக்கும் ஜவான் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கும் மாவீரன் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங் வெவ்வேறு தளங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,இப்படி பல விஷயங்களில் சினிமாவிற்கு உறுதுணையாக இருக்கிறார் ஆதித்யா ராம்.