'பேராண்மைய விட ஆக்சன் ப்ளாக் இருக்கா?'- ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து பேசிய அவரது தந்தை எடிட்டர் மோகன்! ஸ்பெஷல் வீடியோ இதோ

ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து பேசிய அவரது தந்தை எடிட்டர் மோகன்,jayam ravi father editor mohan about his action block movies | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இயக்குனர் மணிவண்ணம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கதையின் நாயகனான பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அடுத்ததாக இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் இறைவன், இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் ராஜேஷ்.M இயக்கத்தில் JR30 உள்ளிட்ட திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட ஜெயம் ரவி அவர்கள் தனது திரைப் பயண அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஜெயம் ரவியின் சகோதரரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனருமான இயக்குனர் மோகன் ராஜா, தந்தை எடிட்டர் மோகன் மற்றும் தாயாரும் கலந்து கொண்டு சிறப்பு நேர்காணலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை ரசிகர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில்

"எப்படித்தான் அவன (ஜெயம் ரவி) சாக்லேட் பாய்னு நினைக்கிறாங்கன்னு எனக்கு புரியவே இல்ல.." என பேசத் தொடங்கிய ஜெயம் ரவி அவர்களின் தந்தை எடிட்டர் மோகன் அவர்கள் தொடர்ந்து பேசிய போது, “ஒரு விஷயம் பாருங்கள் நீங்கள் அனைவருமே தவறாக உணர்ந்து இருக்கிறீர்கள்... எம்.குமரன் படத்தை விட ஒரு ஆக்ஷன் பிளாக் இருக்கிறதா? பேராண்மை படத்தை விட ஒரு ஆக்ஷன் பிளாக் இருக்கிறதா? எதையாவது ஒன்றை சொல்லி விடுகிறார்கள் அதை அப்படியே எல்லோரும் பின் தொடர்ந்து போகிறார்கள். ஆக்சன் பிளாக்கில் அவன் செய்யாத ஆக்ஷன் பிளாக்கே கிடையாது. அப்படி அடி வாங்கி இருக்கிறான்… உடம்பெல்லாம் காயம். எனக்கே மனசு உறுத்தும் அழகாக இருந்தால் சாக்லேட் பாயாம். கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தால் வேறு மாதிரி ஒரு டைப்…” என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசுகையில், “நான் 1987-ல் “ஒரு தொட்டில் சபதம்” என்ற ஒரு படம் எடுத்தேன். அதில் தான் ராம்கியை ஹீரோவாக்கினேன். சீதா நடித்திருக்கிறார்கள் பெரிய படம் நன்றாக போனது. அந்த திரைப்படத்தில் ராம்கி கதாபாத்திரத்தின் சிறுவயது கதாபாத்திரத்திற்கு நான் பெங்களூரில் இருந்து ஒரு சிறுவனை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தேன். அப்போது அதே வயது தான் இவனுக்கும் (ஜெயம் ரவி). அந்தப் படத்தில் அந்த சிறுவனோடு விளையாடுவதற்கு இன்னொரு சிறுவன் தேவைப்பட்டான். அப்போது பள்ளிக்கூடத்தில் இருந்து டே வாடா என இவனைக் (ஜெயம் ரவி) கூட்டி வந்து நடிக்க வைத்தேன். நடிக்க வைத்தால் ஒரே டேக்கில் ஓகே செய்து விட்டான். என்ன ஆகிவிட்டது என்றால் எனக்கு வெட்கம் ஆகிவிட்டது. நம்ம பிள்ளையை விட்டுவிட்டு பெங்களூரிலிருந்து ஒரு பையனை கூட்டி வந்திருக்கிறோமே என அன்றைக்கு நான் வெட்கப்பட்டேன்” என எடிட்டர் மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்து கொண்ட ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் புது வீடியோ இதோ…
 

அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகிய துணிவு, கேப்டன் மில்லர் பட நடிகர்... குவியும் வாழ்த்துகள்!
சினிமா

அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகிய துணிவு, கேப்டன் மில்லர் பட நடிகர்... குவியும் வாழ்த்துகள்!

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!
சினிமா

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!

'பிரச்சனையா மாத்துறது நான் தான்!' 'எனக்குத் தெரிந்த ஒரே வழி!'- சண்டைகள் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! வீடியோ இதோ
சினிமா

'பிரச்சனையா மாத்துறது நான் தான்!' 'எனக்குத் தெரிந்த ஒரே வழி!'- சண்டைகள் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! வீடியோ இதோ