அழகிய ஆண் குழந்தைக்கு அப்பாவாகிய துணிவு, கேப்டன் மில்லர் பட நடிகர்... குவியும் வாழ்த்துகள்!

ஜான் கொக்கன் - பூஜா ராமச்சந்திரனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது,John kokken and pooja ramachandran blessed with baby boy | Galatta

தனது திரைப் பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் அஜித் குமாரின் வீரம் சிலம்பரசன்.TRன் ஒஸ்தி என பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் ஜான் கொக்கன் பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரம்மாண்ட படைப்பான பாகுபலி திரைப்படத்தில் காலகேயர்களில் ஒருவராக நடித்து பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து கன்னடத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடிக்க, அதிரடியான திரைப்படமாக வெளிவந்து மெகா ஹிட்டாகி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த கேஜிஎஃப் திரைப்படத்தில் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன், தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் படமான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றார்.

தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக, இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித்குமாருக்கு கதாநாயகனாக நடித்த ஆக்சன் என்டர்டைனிங் திரைப்படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான துணிவு திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் ஜான் கொக்கன் நடித்திருந்தார். அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க அதிரடியான பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பீட்சா, அந்தகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரனை ,ஜான் கொக்கன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

இதனையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த ஜான் கொக்கன் விரைவில் பெற்றோர்களாக இருப்பதை "குட்டி அதிசயம் வரவிருக்கிறது" என தெரிவித்து கர்பமாக இருக்கும் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதவிட்டார். தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் கர்ப்பகால புகைப்படங்கள் ஒவ்வொன்றையும் ஜான் கொக்கன் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் கை இவர்களது விரல்களை பற்றிய படி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை அறிவித்த ஜான் கொக்கன் தனது மகனுக்கு “கியான் கொக்கன்” என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் “அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி” எனவும் தெரிவித்துள்ளார். அழகிய ஆண் குழந்தைக்கு பெற்றோர்களாகியிருக்கும் ஜான் கொக்கன் மற்றும் பூஜா ராமச்சந்திரன் இருவருக்கும் கலாட்டா குழுமம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜான் கொக்கன் பகிர்ந்த அந்த பதிவு & புகைப்படம் இதோ…
 

Here comes our little Boy 👦 to fill our hearts and lives with joy 😊 ❤️.
Welcoming " KIAAN KOKKEN" to the world 🌎 ✨️.
Thank you for all your love and prayers 🙏 ❤️ 💕 #oubabyishere #celebrationsbegin #babyboy pic.twitter.com/FWeTTsYKVi

— John Kokken (@highonkokken) April 29, 2023

ரொமாண்டிக்கான தருணத்தை RECREATE செய்த ஜெயம் ரவி - ஆர்த்தி... ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நிறைந்த காதல்! வைரல் வீடியோ இதோ
சினிமா

ரொமாண்டிக்கான தருணத்தை RECREATE செய்த ஜெயம் ரவி - ஆர்த்தி... ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நிறைந்த காதல்! வைரல் வீடியோ இதோ

எங்க DATING மொத்தமும் U-TURN அடிச்சு CARலயே தான்... வீட்டிற்கு தெரியாமல் காதலித்த ரகசியங்கள் பகிர்ந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

எங்க DATING மொத்தமும் U-TURN அடிச்சு CARலயே தான்... வீட்டிற்கு தெரியாமல் காதலித்த ரகசியங்கள் பகிர்ந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! ட்ரெண்டிங் வீடியோ

விஜய் ஆண்டனியின் பக்கா மாஸ் அவதாரமாக வரும் பிச்சைக்காரன் 2... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

விஜய் ஆண்டனியின் பக்கா மாஸ் அவதாரமாக வரும் பிச்சைக்காரன் 2... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!