"முயற்சிகள் தோல்வியடையாது!"- AK62 பட பக்கா மாஸ் டைட்டில் விடாமுயற்சி… அஜித் குமாரின் பிறந்தநாள் ட்ரீட் இதோ!

அஜித் குமாரின் AK62 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது,ajith kumar ak62 with magizh thirumeni titled vidamuyarchi | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகராகவும் இந்திய திரையுலகில் பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் அஜித் குமார் இன்று (மே 1) தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கலாட்டா குழுமம் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் உலகெங்கும் உள்ள தமிழர்களும் சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் அஜித் குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முறையாக சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் உடன் கைகோர்த்த அஜித் குமார் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்தார். இதனை அடுத்து இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக அஜித் குமார் நடித்த வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த இந்த வெற்றிக் கூட்டணியின் மூன்றாவது வெற்றி படமாக கடந்த 2023 ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படம் துணிவு. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இந்த வரிசையில் அடுத்ததாக அஜித்குமாரின் திரை பயணத்தில் 62 ஆவது திரைப்படமாக தயாராகும் AK62 திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் AK62 திரைப்படத்தை தயாரிக்க, இயக்குனர் விக்னேஷ் சிவன் அப்படத்தை இயக்குவதாகவும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பின்னர் இந்த கூட்டணி கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், AK62 திரைப்படத்தை இயக்கப் போவது யார்? என்று ஆர்வம் அதிகமானது. அச்சமயத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து குறிப்பிடப்படும் ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் மகிழ் திருமேனி AK62 திரைப்படத்தை இயக்கு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்த நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என காத்திருந்தனர்.

இந்நிலையில் காத்திருந்த அனைவரையும் உற்சாகமூட்டும் வகையில் அஜித் குமார் அவர்களின் பிறந்த நாளான இன்று மே 1ம் தேதி AK62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் தனது 62-வது திரைப்படமாக நடிக்கும் AK62 திரைப்படத்திற்கு விடாமுயற்சி - EFFORTS NEVER FAIL பெயரிடப்பட்டுள்ளது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இதர அறிவிப்புகளும் படப்பிடிப்பு குறித்த தகவல்களும் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்குமாரின் பிறந்தநாளை கொண்டாட்டமாக்க வந்த விடாமுயற்சி திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இதோ…
 

Wishing the man of Persistence, Passion and Hard work 🫡 Our dearest #AjithKumar sir a Happy B'day 🥳

It’s time for Celebration now...! 🥳🎉🎊

Our next film with Mr. #AK is titled #VidaaMuyarchi 💪🏻 "EFFORTS NEVER FAIL" and will be directed by the cult film-maker… pic.twitter.com/9uFcnjJIv4

— Lyca Productions (@LycaProductions) April 30, 2023

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!
சினிமா

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!

'பிரச்சனையா மாத்துறது நான் தான்!' 'எனக்குத் தெரிந்த ஒரே வழி!'- சண்டைகள் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! வீடியோ இதோ
சினிமா

'பிரச்சனையா மாத்துறது நான் தான்!' 'எனக்குத் தெரிந்த ஒரே வழி!'- சண்டைகள் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! வீடியோ இதோ

ரொமாண்டிக்கான தருணத்தை RECREATE செய்த ஜெயம் ரவி - ஆர்த்தி... ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நிறைந்த காதல்! வைரல் வீடியோ இதோ
சினிமா

ரொமாண்டிக்கான தருணத்தை RECREATE செய்த ஜெயம் ரவி - ஆர்த்தி... ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நிறைந்த காதல்! வைரல் வீடியோ இதோ