பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!

பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்,ponniyin selvan 2 movie first day box office collection report | Galatta

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட நேற்று ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுடைய ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற இயக்குனரான இயக்குனர் மணிரத்னம் தனது திரைப் பயணத்தின் கனவு படைப்பாக உருவாக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் புகழ்மிக்க எழுத்தாளரான அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் எனும் தலைசிறந்த வரலாற்று புனைவு நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னத்தோடு இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் திரைக்கதை அமைத்து வசனம் எழுதினர்.  தோட்டா தரணியின் கலை இயக்கமும் ரவிவர்மாவின் அட்டகாசமான ஒளிப்பதிவும் பொன்னியின் செல்வனின் பிரம்மிப்பை கண்முன் நிறுத்த, ஸ்ரீகர் பிரசாத்தின் கச்சிதமான படத்தொகுப்பும் ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான இசையும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று 500 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

தற்போது வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு விமர்சனம் ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றுள்ளது. முன்னதாக ரிலீசுக்கு முன்பு முன்பதிவிலேயே பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தினர். எனவே பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தை விட பாகம் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆயிரம் கோடி வரை பாக்ஸ் ஆபீஸில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திரையரங்குகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் நாளிலேயே 32 - 35 கோடி வரை பாக்ஸ் ஆஃபீஸில் வசூலித்திருப்பதாக தற்போது நம்பத்தகுந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

எங்க DATING மொத்தமும் U-TURN அடிச்சு CARலயே தான்... வீட்டிற்கு தெரியாமல் காதலித்த ரகசியங்கள் பகிர்ந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

எங்க DATING மொத்தமும் U-TURN அடிச்சு CARலயே தான்... வீட்டிற்கு தெரியாமல் காதலித்த ரகசியங்கள் பகிர்ந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! ட்ரெண்டிங் வீடியோ

விஜய் ஆண்டனியின் பக்கா மாஸ் அவதாரமாக வரும் பிச்சைக்காரன் 2... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

விஜய் ஆண்டனியின் பக்கா மாஸ் அவதாரமாக வரும் பிச்சைக்காரன் 2... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் SSசக்கரவர்த்தி காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

அஜித் குமாரின் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் SSசக்கரவர்த்தி காலமானார்! சோகத்தில் திரையுலகம்