வடிவேலுவின் மிரட்டலான புது அவதாரம்... கவனம் ஈர்க்கும் மாரி செல்வராஜின் மாமன்னன் பட அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இதோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு,mari selvaraj in maamannan movie first look posters out now | Galatta

தொடர்ந்து தரமான படைப்புகளை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இயக்குனராக அறிமுகமாகிய முதல் திரைப்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் வெற்றி பெற்றதோடு விமர்சனம் ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளையும் பெற்றது. அடுத்ததாக இயக்குனர் தனுஷை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படமாக வெளிவந்த கர்ணன் திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் 50 சதவீத இயற்கைகளோடு திரையரங்குகள் இயங்கிய போதும் பாக்ஸ் ஆஃபீஸில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்கு சிறுவர்கள் மற்றும் நடிகர் கலையரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வாழை என்னும் திரைப்படத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். தொடர்ந்து நடிகர் சீயான் விக்ரமின் மகனும் பிரபல இளம் நடிகருமான துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். அர்ஜுனா விருது பெற்ற இந்தியாவின் கபடி விளையாட்டு வீரர் மனத்தி.P.கணேசன் அவர்களின் பயோபிக் திரைப்படமாக உருவாகும் புதிய ஸ்போர்ட்ஸ் படமாக இத்திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தற்போது தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவு செய்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடித்த கடைசி திரைப்படமாக வெளிவர இருக்கிறது மாமன்னன் திரைப்படம். அதேபோல் வைகைப்புயல் வடிவேலு தனது திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட மிரட்டலான ஒரு கதாபாத்திரத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கு செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார்.  மாமன்னன் திரைப்படத்தை வருகிற ஜூன் மாதம் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகத்தோடு மாமன்னன் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இதோ…
 

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
- மாமன்னன் 🤴

Here’s another powerful poster of #MAAMANNAN 👑@Udhaystalin @mari_selvaraj @RedGiantMovies_ @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @MShenbagamoort3 pic.twitter.com/fmaXudhNul

— Red Giant Movies (@RedGiantMovies_) May 1, 2023

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!
சினிமா

பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் 2 பட முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? அதிரடியான பாக்ஸ் ஆபீஸ் தகவல் இதோ!

'பிரச்சனையா மாத்துறது நான் தான்!' 'எனக்குத் தெரிந்த ஒரே வழி!'- சண்டைகள் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! வீடியோ இதோ
சினிமா

'பிரச்சனையா மாத்துறது நான் தான்!' 'எனக்குத் தெரிந்த ஒரே வழி!'- சண்டைகள் குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி - ஆர்த்தி! வீடியோ இதோ

ரொமாண்டிக்கான தருணத்தை RECREATE செய்த ஜெயம் ரவி - ஆர்த்தி... ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நிறைந்த காதல்! வைரல் வீடியோ இதோ
சினிமா

ரொமாண்டிக்கான தருணத்தை RECREATE செய்த ஜெயம் ரவி - ஆர்த்தி... ரசிகர்கள் கொண்டாட்டத்தில் நிறைந்த காதல்! வைரல் வீடியோ இதோ