ஜெய்-சுந்தர் Cயின் பட்டாம்பூச்சி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | June 14, 2022 20:00 PM IST

தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெய் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக என வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வரும் நிலையில் தற்போது இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
முன்னதாக கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுர்தர்.C இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து காஃபி வித் காதல் படத்திலும் ஜெய் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வரிசையில் அடுத்ததாக ஜெய்-சுந்தர்.C இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி.
இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தை AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ளார். மேலும் பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில், பட்டாம்பூச்சி திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Intense, Dark & Gripping! #SundarC 's most awaited edge of the seat thriller!!#Pattampoochi 🦋
— KhushbuSundar (@khushsundar) June 12, 2022
In theatres from June 24th.#BadriNarayanan @Actor_Jai @HoneyRoseOffl #ImmanAnnachi @FennyOliver @navneethsundar @poetpaavijay@vonimusic @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/L7tZVzaKIo