லாரன்ஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் சந்திரமுகி 2!
By Anand S | Galatta | June 14, 2022 19:16 PM IST

மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஜோதிகா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்த சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராம் குமார் மற்றும் இளைய திலகம் பிரபு இணைந்து தயாரித்த சந்திரமுகி திரைப்படம் ஹாரர் காமெடி படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. குறிப்பாக ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு இணைந்து வரும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் இன்றளவும் ஃபேவரட் நகைச்சுவைக் காட்சிகளாக இருக்கின்றன.
மேலும் நயன்தாரா, பிரபு, மாளவிகா, நாசர், செம்மீன் ஷீலா, வினீத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது சந்திரமுகி பார்ட் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சந்திரமுகி 2 படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முன்னணி இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 படத்திலும் வைகைப்புயல் வடிவேலு நடிக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகுபலி, RRR படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசை அமைக்கும் சந்திரமுகி 2 படத்துக்கு R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டாதரணி கலை இயக்கம் செய்கிறார். இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தை அறிவிக்கும் வகையில் லைகா எனக்கு நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
Elated to announce 🤩 our next Big project #Chandramukhi2 🗝️✨
— Lyca Productions (@LycaProductions) June 14, 2022
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu 😎
Directed by #PVasu 🎬
Music by @mmkeeravaani 🎶
Cinematography by @RDRajasekar 🎥
Art by #ThottaTharani 🎨
PRO @proyuvraaj 🤝🏻 pic.twitter.com/NU76VxLrjH
Positive Vibes ✨ & Happy Faces 😇 all around #Chandramukhi2 🗝️✨
— Lyca Productions (@LycaProductions) June 14, 2022
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu 😎
Directed by #PVasu 🎬
Music by @mmkeeravaani 🎶
Cinematography by @RDRajasekar 🎥
Art by #ThottaTharani 🎨
PRO @proyuvraaj 🤝🏻 pic.twitter.com/pf57zgJ7xC