கீர்த்தி சுரேஷ்-டோவினோ தாமஸின் வாஷி பட விறுவிறுப்பான ட்ரைலர் !
By Aravind Selvam | Galatta | June 14, 2022 19:12 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருது வாங்கிகொடுத்தது.இதனை அடுத்து இவர் நடித்த அண்ணாத்தே,சர்க்காரு வாரிப்பாட்டா,சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இதனை தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் வேதாளம் ரீமேக்,நானி நடிக்கும் தசரா,டோவினோவுடன் வாஷி உள்ளிட்ட சில முன்னணி படங்களில் நடித்துள்ளார் கீர்த்தி.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்கும் கீர்த்தி , தனி ஹீரோயினாகவும் நடித்து அசத்தி வருகிறார்.
மலையாளத்தில் டோவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கும் வாஷி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.இந்த படத்தினை மேனகா சுரேஷ் மற்றும் ரேவதி சுரேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தினை விஷ்ணு ஜி ராகவ் இயக்கியுள்ளார்.
இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களின் கவனம் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்